search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் சித்ரவதை"

    • 54 பவுன் நகையை பறித்துக்கொண்டு பட்டினி போட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்க புரத்தை சேர்ந்தர் கிருத்திகா. இவருக்கும் தூத்துக்குடி கீழக்கரந்தை செங்கோட் டையை சேர்ந்த மணி கண்டன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கிருத்திகா விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனவே திருமணத்தின் போது 54 பவுன் நகை, வைர மோதிரம், திருமண செலவு ரூ.5 லட்சம் ஆகி யவை கணவர் மணிகண்டன் வீட்டாருக்கு வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தோம். அங்கு கணவர் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    எனக்கு கொடுத்த 50 பவுன் நகையில் பாதியை அவரது சகோதரிக்கு கொடுத்து விட்டார். மேலும் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து பட்டினி போட்டு என்னை துன்புறுத்தினார். இதற்கு அவரது தாய் பொன்னுத்தாய், சகோதரி கோகிலா உடந்தையாக இருந்தனர்.

    இந்த நிலையில் என்னை, எனது தாய் வீட்டில் விட்டு விட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என கூறி கணவர் சென்றுவிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்வர்களின் மீது நடவ டிக்கை எடுக்குமாறு போலீ சாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து குழந்தையை வளர்த்து வந்தனர்.
    • மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.

    தேனி:

    தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள்.
    • போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புனே:

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக செல்லும் தம்பதிகளை தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று மனித எலும்பு பவுடரை சாப்பிட சொல்லி உறவினர்கள் வற்புறுத்தி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அம்மாநிலத்தின் தொழில் நகரமாக திகழும் புனே நகரை சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.

    கல்யாணத்தின் போது வரதட்சணையாக ஏராளமான நகைகள், பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த அந்த பெண்ணின் வாழ்க்கை வரதட்சணை கொடுமையால் தலைகீழாக மாறியது. கணவர், மாமியார் மற்றும் உறவினர்கள் அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இது குறித்து அந்த பெண் புனே போலீசில் புகார் செய்தார்.

    இந்த சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் குடும்பத்தார் மந்திரவாதி ஒருவரை சந்தித்தனர்.

    அப்போது அந்த மந்திரவாதி அமாவாசை நாளில் வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் சுடுகாட்டுக்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட்டால் விரைவில் கரு உருவாகும் எனவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று மந்திரவாதி வீட்டுக்கு வந்து சில பரிகார பூஜைகளை செய்தார். பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கும் அந்த மந்திரவாதி பூஜை நடத்தினார்.

    பின்னர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளின் பவுடரை அந்த பெண்ணை சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபற்றி புனே போலீஸ் துணை சூப்பிரெண்டு சுனில் சர்மா கூறும் போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(வயது29). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், விக்ரம் பிள்ளை என்பவரும் கடந்த டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் போது வரதட்சணை வேண்டாம் என கூறினார்கள்.

    பின்னர் எனது கணவர் விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்.

    நான் கருவுற்று இருந்த போது அந்த கருவை கலைத்து விடுமாறு கூறினார்கள். அவர்கள் என்னை அடித்ததில் கருசிதைவு ஏற்பட்டு விட்டது. எனது கணவரும், அவரது நண்பரும், உறவினர்கள் சிலரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர்.

    எனது கணவர் நிலம் ஒன்றை விற்று ரூ.15 லட்சம் பணத்தை உறவினர்களுக்கு கொடுத்தார். அப்போது அவரது வீட்டையும் அடகு வைத்து பணம் தருமாறு கேட்டு வருகிறார்கள். இது தொடர்பாக நான் கேட்டால் என்னை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

    எனவே எனது கணவர் உள்பட அனைவரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த நாகர்கோவில் மகளிர் போலீசுக்கு உத்தர விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தா குமாரி விசாரணை நடத்தினார்.

    அந்த புகார் மனு மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது. விக்ரம்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 498(ஏ), 294(பி), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரம் ஒண்டி வீரன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). இவருக்கும் துர்கா தேவி (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 32 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் படி துர்கா தேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார்.

    மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டால்தான் திருமணத்தின் போது கொடுத்த நகைகளை திருப்பி தருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வல்லக்குளத்தைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 28). இவருக்கும், விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் வைதேகி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக 10 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டனர். அதனை தாய் வீட்டில் இருந்து வாங்கிக் கொடுத்தேன்.

    கடந்த 2013-ம் ஆண்டு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்தேன். அப்போது எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க இதுவரை கணவர் வரவில்லை.

    இது குறித்து கேட்டால் ரூ.50 ஆயிரம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கணவர் கூறினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் சீனிவாசன்-ராஜேஸ்வரி, மைத்துனர் ஜெயக்குமார் ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் உள்பட 4 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் என்ஜினீயர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (26).

    இவர்களுக்கு 1.12.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். பின்னர் சத்யநாதன் குடும்பத்தினர் ரம்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீ சில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது திருமணத்தின் போது 32 பவுன் நகை ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கனவர் சத்யநாதன் சித்ரவதை செய்ய தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று 10 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் எனது கணவர் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். இதற்கு எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் தமிழ் செல்வி, கணவரின் தம்பி சண்முகபிரியன், அவரது மனைவி ஸ்ரீமதி, உறவினர்கள் சந்திர மோகன், இளவரசன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் சத்யநாதன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகாதேவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் கல்யாணி, சகோதரர் சந்திரபோஸ் ஆகியோர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, இளைய ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
    தேனி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் சபிதா (வயது30). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை மந்திச்சுணையை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை வேல்முருகனின் தாயார் லட்சுமி வாங்கி வைத்துள்ளார்.

    மேலும் வேல்முருகனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சபிதா தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் மேலும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும். இல்லையென்றால் விவாகரத்து செய்து விடுவதாக கூறி சித்ரவதை செய்துள்ளார்.

    இதற்கு வேல்முருகனின் தந்தை அழகுபாண்டி மற்றும் உறவினர் கேசவன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சபிதா உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×